கடந்த காலத்தை ஆசியர்கள் மறக்கமாட்டார்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற மாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது இல்லை - ஆசிரியர் சங்கம் கடிதம் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 9 April 2024

கடந்த காலத்தை ஆசியர்கள் மறக்கமாட்டார்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற மாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது இல்லை - ஆசிரியர் சங்கம் கடிதம்



கடந்த காலத்தை ஆசியர்கள் மறக்கமாட்டார்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற மாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது இல்லை - ஆசிரியர் சங்கம் கடிதம் Asians will not forget the past - PM Stalin did not say he would not fulfill teachers' demands - Teachers Union letter

அதிமுக ஆட்சியில் கொடுமைகள் மட்டுமே அனுபவித்தோம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மறக்கமாட்டார்கள் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு முதலமைச்சர் மு.க.ஸ்ட்டாலின் பக்கம் தான் என நிறுவனத் தலைவர் - சா.அருணன் அறிக்கை

கடந்த அதிமுக ஆட்சியில்

கொடுமைகள் மட்டுமே அனுபவித்தோம் என்பதற்கு உதாரணம், சென்ற ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டபோது அரசு அலுவலகங்கள் அரசு பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள் முடங்கின நிலைமையை சரி செய்ய பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் போராட்டத்தை நசுக்குகின்ற விதமாக காவல்துறையை ஏவிவிட்டு வழக்குகள் தொடர்ந்து 5000 கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை சிறையில் அடைத்தனர்

பின்பு துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு பணியிடை நீக்கம் செய்தனர் பல ஆயிரம் கணக்கான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை பணியிட மாற்றத் செய்து பந்தாடினார்கள் என்பதை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மறக்க மாட்டார்கள் , அப்போதைய ஆட்சியில் நடந்த ஒவ்வொரு போராட்டத்திற்கும் அப்போதைய எதிர்கட்சி தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக போராட்டக்கலத்திற்கே வந்து ஆதரவளித்து உடலை வருத்தி போராட வேண்டாம்

நான் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார் அதோடு நின்று விடாமல் 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கோரிக்கைகள் அனைத்தும் இடம்பெற செய்தார் , ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு வரி கூட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களை பற்றி ஒருவிரிக்கூட இடம்பெற வில்லை, என்பதை அரசு ஊழியர்கள நங்கு அறிவார்கள்

2021ம் ஆட்சி வந்த முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வருக்குகள் துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்தார் , போராட்டக்கலாத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களை அதே பணியிடத்தில் மீண்டும் பணி அமர்த்த பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கினார் , போராட்டக்காலத்தை பணிக் காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்கினார்

அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்கிவர் தான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவலராக திகழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறுவுருவம் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ,

சென்ற பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் போராட்டம் என்றாலே வழக்குகள் சிறை , பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் செய்து பந்தாடிய காலம் ஒன்று இருந்த காலம் ஒன்று இந்ததை அரசு ஊழியர்கள் ஆசியர்கள் மறக்கமாட்டார்கள், மறக்கக்கூடாது ,

கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அறை எத்திசையில் இருந்தது என்றே தெரியாத காலத்தை எப்படி மறக்கமுடியும், அப்போதைய முதலமைச்சரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ஆசிரியர்களின் ஊதியத்தை பற்றி பேசியதை மறக்க முடியுமா ஐந்தாம் கிளாஸ் வாத்தியாரே 85 ஆயிரம் வாங்குகிறான் என ஒருமையில் பேசியதை மறந்து விட்டீர்களா 100% விழுக்காடு வருமானத்தில் 90% விழுக்காடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கே செலவாகிறது என பொய் தகவலை மக்களிடம் தெரிவித்து மக்களை திசை திருப்பியதை நீங்கள் மறந்து விட்டீர்களா இவர்களா நமக்கு நன்மை செய்வார்கள் ஒருசிலர் திசை திருப்புவதை எப்படி நாம் ஏற்க முடியும்

ஆனால் அதற்கு மாறாக அறிக்கையில் இடம்பெற்ற நமது ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற சூழ்நிலையில் அவர்கள் மீது எதாவது எடுத்தார்களா யோசுத்து பாருங்கள், இந்த மூன்றாண்டுகளில் பல முறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே நேரடியாக தலைமை செயலகத்தில் தன் அறைக்கே அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கையை கேட்டறிந்து நான் ஆட்சிக்கு வந்தநேரம் கொரோனா பெருந்தொற்றால் நிதிநிலை பற்றாகுறை நிறைவேற்றுவதில் காலத்தாமதம் ஆகிறது நிதிநிலை சரியாக சரியாக அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என்று தான் சொல்கிறாரே தவிர அவர் வாயில் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்ற மாட்டேன் என வந்ததே இல்லை என்பதை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் , நான் செய்யாமல் யார் செய்வார்கள் என உரிமையோடு உறுதியளித்துவருகிறார்

நமது எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் கொண்டுவருவார் , அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் கொண்டுவருவார்

சமவேலைக்கு சம ஊதிய முரண்பாடு சரிசெய்தல், பகுதிநேர சிறப்பாசியர்கள் பணி நிரந்தரம் செய்தல் , அனைத்துறை தூய்மை பணியாளர்கள, ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்தில கொண்டுவருதல் , பன்நோக்கு மருத்துவ ஊழியர்கள் பணிநிரந்தரம், விளையாட்டுத்துறையில் பணியாற்றும் அவுட்ஷோர்சிங்க் முறையில் பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியராக கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது இவர் செய்யவில்லை என்றால் யார் செய்ய முடியும் என்பதை உணர்ந்து

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம் தான் என்பதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here