கடும் வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்வது எப்படி.? முக்கிய டிப்ஸ்.. - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 9 April 2024

கடும் வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்வது எப்படி.? முக்கிய டிப்ஸ்..



கடும் வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்வது எப்படி.? முக்கிய டிப்ஸ்...*

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் இப்போதே உக்கிரமாக துவங்கி இருக்கும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சரான டாக்டர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் வெப்பம் தொடர்பான நோய்களை நிர்வகிப்பதற்கான பொது சுகாதார தயார்நிலை குறித்து சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது IMD எச்சரிக்கைகள் பெறப்பட்டவுடன் மாநிலங்கள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் வெப்பம் சார்ந்த நோய்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே முன்கூட்டியே ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு வெப்ப அலைகளினால் ஏற்படும் கடும் தாக்கத்தை குறைக்க பெரிதும் துணைபுரியும் என்று அவர் கூட்டத்தில் கூறினார்.

இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை ஏற்பட கூடும் என ஏற்கனவே எச்சரித்துள்ளது. அதே போல நடப்பாண்டு 4 - 8 நாட்களுக்கு மாறாக 10-20 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை தொடர்பான நோய்கள் என்பவை கடுமையான வெயிலில் நீண்ட நேரம் இருக்க நேரிடுவதால் ஏற்படும் பல நிலைகளை உள்ளடக்கியது. கடுமையாக வியர்ப்பது, பலவீனம், குமட்டல் மற்றும் தலைசுற்றல் உள்ளிட்ட அறிகுறிகளால் heat exhaustion-ஆனது வகைப்படுத்தப்படுகிறது.

அதே நேரம் ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke) என்பது மிகவும் கடுமையான நிலையாக குறிப்பிடப்படுகிறது. இது உடல் தானாகவே குளிர்ச்சியடைய முடியாமல் அதிக வெப்பமாகும் போது ஏற்படும் ஒரு மெடிக்கல் எமெர்ஜென்சி கண்டிஷன் ஆகும். ஆபத்தான அளவிற்கு உயரும் உடல் வெப்பநிலை, மன செயல்பாட்டில் மாற்றம் மற்றும் உறுப்பு சேதமாக சாத்தியம் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு இது காரணமாக இருக்கும். டிஹைட்ரேஷன், ஹீட் க்ராம்ப்ஸ் மற்றும் ஹீட் ரேஷஸ் உள்ளிட்டவை வெப்ப அலை தொடர்பான சில பொதுவான நோய்களாகும். முதியவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் சில தீவிர மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் உட்பட பலர் வெப்ப அலைகளால் எளிதில் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். போதுமான நீர்சத்துடுன் இருப்ப, வெயில் அதிகமாக இருக்கும் போது வெளியே சென்று கடுமையான செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது, முடிந்த வரை நிழலில் இருப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் வெப்பம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது (NDMA) வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளது.

வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் பிற முக்கிய வழிகாட்டுதல்கள் கீழே…

உங்களுக்கு தாக்கம் இருக்கிறது, இல்லை என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் தினசரி பரிந்துரைக்கப்பட்டிருக்கும் போதுமான அளவு தண்ணீர் மற்றும் ஆரோக்கிய பானங்களை குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

அதிக எடை இல்லாத, வெளிர் நிற, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

வெயிலில் வெளியே செல்ல நேரிட்டால் கண்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய மற்றும் தரமான பாதுகாப்பு கண்ணாடிகள், குடை அல்லது தொப்பி, ஷூக்கள் அல்லது செப்பல்கள் உள்ளிட்டவற்றை மறக்காமல் பயன்படுத்துங்கள். வெயில் மிக கடுமையாக இருக்கும் போது வெளியே சென்று கடினமா பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்

சிறிய தூரம் பயணம் செய்தால் கூட உங்களுடன் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள்.

உடலை டிஹைட்ரேட் செய்யும் ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் கார்பனேட்டட் சாஃப்ட் டிரிங்க்ஸ்களை கடும் வெயில் நேரத்தில் தவிர்த்து விடுங்கள்.

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், அதே போல் மீந்த பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம்.

நீங்கள் வெயிலில் நேரம் செலவழித்து வேலை செய்ய நேரிட்டால் தொப்பி அணிந்து கொள்ளுங்கள் அல்லது குடையை பயன்படுத்துங்கள், மேலும் உங்கள் தலை, கழுத்து, முகம் மற்றும் கைகால்களுக்கு ஈரமான துணியைப் பயன்படுத்துங்கள்.

நீங்கள் ஓரிடத்தில் பார்க் செய்து விட்டு செல்லும் வாகனங்களில் குழந்தைகளையோ அல்லது செல்லப்பிராணிகளையோ விட்டு விட்டு செல்லாதீர்கள்.

உங்களுக்கு மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டாலோ அல்லது உடல்நிலை சரியில்லை என்று தோன்றினாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனை செல்லுங்கள்.

ORS, லஸ்ஸி, அரிசி நீர், லெமன் வாட்டர், மோர் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை பருகுங்கள். இது உடலை மீண்டும் ஹைட்ரேட் செய்ய உதவுகிறது.

விலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க திரைச்சீலைகள், ஷட்டர்கள் அல்லது சன்ஷேட்களைப் பயன்படுத்துங்கள் மற்றும் இரவில் ஜன்னல்களை திறந்து வைத்து கொள்ளுங்கள்.

வெயில் கடுமையாக இருந்தால் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கவும்.

Heat stroke is the most serious heat-related illness. It occurs when the body can no longer control its temperature: the body's temperature rises rapidly, the sweating mechanism fails, and the body is unable to cool down. When heat stroke occurs, the body temperature can rise to 106°F or higher within 10 to 15 minutes.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here