IFHRMS - வருமான வரி பிடித்தம் - நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 26 April 2024

IFHRMS - வருமான வரி பிடித்தம் - நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள்



IFHRMS - வருமான வரி பிடித்தம் - நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் IFHRMS - Income Tax Deduction - Appeal to Minister of Finance Tamil Nadu Higher Secondary School Graduate Teachers Association

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

பெறுநர்:

மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு. மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கு, இனிய வணக்கங்கள்.

பொருள் இந்த நிதியாண்டில் (2024-2025) இருந்து ஒவ்வொரு மாதமும் IFHRMS மென்பொருள் மூலமாக ஆசிரியர் அரசு ஊழியர் ஊதியத்திலிருந்து வருமான வரிக்கு பிடித்தம் செய்யும் நடைமுறைக்கு ஒவ்வாத புதிய முறையை அடியோடு கைவிட்டு - பழைய நடைமுறையை தொடர்ந்து மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கனிவுடன் வேண்டுதல் சார்ந்தது.

தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் IFHRMS மென்பொருள் மூலமாக தற்போது, ஊதியப் பட்டியல் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

வருமானவரி, ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியில் பிப்ரவரி அல்லது மார்ச்சு மாதம் இறுதியில், ஆசிரியர் - அரசு ஊழியர் செலுத்த வேண்டிய வருமான வரியை பிடித்தம் செய்து கொள்ளும் ஆரோக்கியமான நடைமுறை இதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நடைமுறையை முற்றிலும் மாற்றி ஒவ்வொரு மாதமும் வருமான வரியை ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யும் புதிய நடைமுறையை இந்த நிதி ஆண்டில் இருந்து வருமான வரித்துறை செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நடைமுறை தேவையற்றது, ஒவ்வொரு மாதக் கடைசியிலும், ஆசிரியர் அரசு ஊழியர்களை பதற்றத்தில் வைக்கும் மிக மோசமான நடைமுறையாகும். ஒவ்வொரு மாதமும் வாங்கிய கடன்களுக்குரிய தவணைத் தொகையை, திருப்பிச் செலுத்துவதிலேயே விழி பிதுங்கி நிற்கும் இவர்கள் தலையில் மாதா மாதம் இந்த சுமையை ஏற்றுவது, அறிவு பூர்வமானது அல்ல.

நிதி ஆண்டின் இறுதியில் ஒரே தவணையாக கட்டி முடிப்பதைத்தான் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விரும்புகிறார்கள்.

ஆகவே ஆசிரியர் அரசு ஊழியர்களின் இந்த நியாயமான உணர்வுகளை மதித்து, மாதாமாதம் வருமானவரி பிடித்தம் செய்யும் புதிய நடைமுறையை முற்றிலுமாக கைவிட்டு, நிதி ஆண்டின் இறுதியில் ஒட்டுமொத்தமாக பிடித்தம் செய்யும் மிகவும் ஆரோக்கியமான பழைய நடைமுறை தொடர்ந்து நீடிக்க ஆவன செய்யுமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here