அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒதுக்கிய நிதி ரூ 2152கோடியை உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கண்டனம் - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, 10 February 2025

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒதுக்கிய நிதி ரூ 2152கோடியை உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கண்டனம்

Responsive Ads Here
Tamil Nadu Government Employees and Teachers Welfare Federation condemns the Union government for defrauding Tamil Nadu by transferring Rs 2152 crore allocated for the Education for All movement to the states of Uttar Pradesh and Gujarat. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒதுக்கிய நிதி ரூ 2152கோடியை உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கண்டனம்

xa


அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒதுக்கிய நிதி ரூ 2152கோடியை உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் கடும் கண்டனம் ~

ஒன்றிய அரசு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்த சுமார் ரு 2152 கோடியை விடுவிக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது அதாவது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கையான புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும் அப்படிக் கொண்டு வந்தால் மட்டுமே நிதியை விடுவிக்க இயலும் என்று தெரிவித்திருக்கிறது , அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக தான் 12 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு ஆசிரியர்கள் என 15 ஆயிரம் ஆசிரியர்களின் ஊதியம் வகுப்பறை கட்டடங்கள் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான அனைத்துவகை பயிற்சிகள் மேற்கொள்ள இந்த நிதியை தான் பயன்படுத்துகின்றனர் ஆனால் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையான புதிய கல்விக் கொள்கையை தமிழ் நாட்டில் அமல்படுத்தினால் மட்டுமே விடுவிக்க இயலும் என தெரிவித்து நிதியை உத்திரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்து தமிழ்நட்டிற்கு சேர வேண்டிய நிதி ரூ. 2152 கோடியை திருப்பி விட்டுள்ளது, இது எதனால் என்றால் இந்தியையும் சமஸ்கிருத மொழியையும் தமிழ்நாட்டில் கொண்டுவந்து தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்கள் நலனில் தாய் தந்தைக்கு நிகராக காலை உணவு திட்டம் ,மேற்படிப்பில் சாதித்து பல துறைகளில் வேலையாப்பு பெற நான் முதல்வன் திட்டம் , கல்லூரி கனவு , தமிழ் புதல்வன் திட்டம் என பல திட்டங்களை கொண்டுவந்து இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் என்பதை பறைச்சாற்றுகின்ற முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வடிவமைத்து செயல்படுத்தி வுரும் திட்டங்களை தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டு மாணவர்களையும் இளைஞர்களின் கல்வியை சீரழித்து தமிழ்நாட்டு கல்வித்தரத்தை சிதைக்க ஒன்றிய அரசு ரூ.2152 கோடியை உத்தரிபிதேசம் மற்றும் குஜராத்திற்கு திருப்பி அனுப்பி வஞ்சனை செய்துள்ளது

மாற்றான் தாய் மனப்பான்மை எண்ணத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய ரூ. 2152 கோடியை உத்திரபிரதேசம் மாநிலத்திற்கும் குஜராத் மாநிலத்திற்கும் மடை மாற்றம் செய்ததை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வண்மையாக கண்டிக்கிறோம்

4ff4abca-7b6a-49ee-8cf3-d456800386a4


சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment

Post Top Ad