தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கடிதம் - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 27 March 2024

தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கடிதம்

தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கடிதம் Primary School Teacher Alliance letter to Chief Electoral Officer regarding election training courses

மக்களவைத் தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக தமிழ்நாடு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்

பொருள்

மக்களவைப் பொதுத் தேர்தல் 2024 தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் 24.03.2024 மற்றும் 07.04.2024 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த உத்தரவு ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை தினங்கள் என்பதாலும், 24.03.2024 அன்று இந்து மற்றும் கிறித்தவ மத விழாக்கள் நடைபெறுவதை முன்னிட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இரண்டு பயிற்சி வகுப்புக்களையும் பிறிதொரு வேலை நாளில் நடத்த உத்தரவிட வேண்டுதல் சர்பாக

பார்வை कृती : 2028/Elec.VII/2023-112, dated: 19.03.2024

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தால் மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் 19.04.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் பார்வையில் கண்ட தங்களது உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் ஐந்து கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து கட்டப் பயிற்சி வகுப்புகளில் முதல் கட்டப் பயிற்சி வகுப்பு 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்றும், இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்பது மட்டுமே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உறுதியான விடுமுறை நாளாக உள்ளது. எனவே, அந்த விடுமுறை நாட்களிலும் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்துவதை தாங்கள் மறுபரிசீலனை செய்திட வேண்டுகிறோம்.

மேலும், வரும் 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை என்பது இந்துக்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டுக்குச் செல்லும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறும் நாளாகும்.

மேலும், கிறித்தவர்களின் மிக முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு விழாவும் அன்றுதான் நடைபெறுகிறது.

எனவே, மேற்கண்ட காரணங்களைத் தாங்கள் பரிசீலித்து 24.03.2024 மற்றும் 07.04.2024 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள தேர்தல் பயிற்சி வகுப்புகளை பிறிதொரு வேலை நாளில் நடத்திட தாங்கள் ஆவண செய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தங்களைக் கனிவுடன் வேண்டுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here