கட்டுரை
~~~
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிமுக ஆட்சியில் அனுபவித்த கொடுமைகளும், திமுக ஆட்சியில் ஏற்ப்பட்ட நன்மைகளும் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் - சா.அருணன் - ஆதாரத்துடன் தகவல் ~~
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்காலத்தை சீரழித்த திட்டமான பழைய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட் டத்தை 2003ம. ஏப்ரல் 1ம் தேதி நடைமுறை படுத்தி செயல்படுத்தியது அப்போதைய அதிமுக அரசு , இத்திட்டத்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதாரம் கேள்வி குறியானது புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் கொண்டுவர அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்படாமல் முடங்கிப்போனது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களையும் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணாமல், அவர்கள் மீது துறைரீதியான நடைவடிக்கைகளை எடுத்து மிரட்டியது ஆனால் ஒரு துளிக்கூட அஞ்சாமல் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராடினார்கள் ஆனால். அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தாமல் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு
காவல்துறையை ஏவிவிட்டு 1லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடந்து சிறையில் அடைத்தது. துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு அனைவரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அடக்குமுறையை ஏவி விட்டபோதிலும், போராட்டக்களம் இன்னும் தீவிரம் அடைந்தது. அரசின் அனைத்து துறை செயல்பாடுகளும் முடங்கியது நிலமையை சரி செய்ய அப்போதைய அதிமுக அரசு பேச்சுவாரத்தைக்கு அழைத்து சுமூக தீர்வு காணாமல் அடக்குமு றையை தீவிரப்படுத்தி.1 வட்சத்து 50 ஆயிரம் மேற்பட்ட அரசு ஊழியர் ஆசிரியர்களை இரவோடு இரவாக பணி நீக்கம் செய்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அரசு ஊழியர்கள்,ஆசிரியர்ள் சிலர் அதிர்ச்சியில் மரணம் அடைத்தனர். பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடல்நலம் குன்றியது. அவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தை நாடி மீண்டும் பணி வழங்க உத்தரவிட வழக்கு தொடர்ந்தனர் ஆனால் தீர்ப்பு அரசித்கே சாதகமானது, மேல் முறையீடு செய்ய உச்ச நீதிமன்றம் சென்றனர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் , ஆனால் இறுதி தீர்ப்பு அப்போதைய அதிமுக அரசிற்கே சாதகமாக அமைந்தது , மீண்டும் பணி வழங்கலாம வழங்க கூடாதா என்பதை அரசே முடிவெடுக்கலாம் என தீரப்பளித்தது. மேலும் போராட்டத்தை சமாளிக்க 15 ஆயிரம் இளநிலை உதவியாளர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் மாத ரூ 4000/-திற்கு தற்காலிகமாக நியமணம் செய்தார்கள்
நிதி பற்றாக்குறையை காரணம்காட்டி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை வஞ்சிக்கின்ற போக்கை கடைப்பிடித்து 2004ம் ஆண்டு வேலை வாய்ப்பிற்கு தடையாணை பிறப்பித்தார்கள் ,
ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு மிகவும் சிரமத்தில் இருந்தது பள்ளிக்கல்வித்துறை பிரச்சனைகளை சரி செய்ய 55 ஆயிரம் அனைத்து வகை ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிதிலையை காரணம் காட்டி ஐந்து வருட ஒப்பந்த அடிப்படையில் அதாவது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ 4.500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 4000/- இடைநிலை மற்றும் உடற்கல்வி ஓயியம் உள்ளிட்ட சிறப்பாசியர்களுக்கு மாதம் ரூ 3000/- என்ற தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு வாழ்க்கை தரத்தையே கேள்விக்குறியாக்கியது அதிமுக அரசு ,
பின்பு 2006ம் ஆண்டு ஆட்சிக்குவந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அதிமுக ஆட்சியில் 2004ம் ஆண்டு வேலைவாய்ப்பிற்கு போடப்பட்ட தடையாணையை நீக்கி ஒரே கையெழுத்தில் அதிமுக அரசால் ஐந்து வருட ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 4.500/- ரூ. 4000/- ரூ. 3000/- என்ற தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 55.000 மேற்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களையும் கோரிக்கை வைக்காமலேயே ஒன்றரை ஆண்டுக்குள்ளாகவே 2006 ஆண்டு ஆட்சிக்கு வந்து ஜூன் 1 முதல் காலமுறை ஊதியத்தில் கொண்டு வந்து பணி திரந்தரம் செய்து அவர்க ளின் வாழ்க்கைத் தரத்தையே மாற்றி வாழ்வில் விளக்கேற்றினார்.
அதேபோன்று 2003ம் ஆண்டு அரசு ஊழியர் கள் ஆசிரியர்கனின் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய் வூதிய திட்டத்தை மீண்டும். கொண்டுவர நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுதத்தின் போது போராட்டத்தை வலுவிழக்க செய்ய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மூலமாக 15 ஆயிரம் இன நிலை உதவியாளர்களை ரூ.4000 மாத ஊதியத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டனர் ஆனால் அப்போதைய அரசு பணி நிரந்தரம் செய்யாமல் கைவிரித்தது 2006ம் ஆண்டு ஆட்சி வந்த கலைஞர் அவர்கள் காலமுறை ஊதியத்தில் கொண்டுவந்து பணி நிரந்தரம் செய்ததார், அப்போது வழக்கு தொடரப்பட்டது.
இளநிலை உதவியாளர்களை தமிழ்நாடு தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நட்த்தி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது
ஆனால் கலைஞர் அவர்கள் 15000 இளநிலை உதவியாளர்களையும் பணிநீக்கம் செய்யாமல் அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டார்கள் தானே என பாரபட்சம் பாராமல் தமிழ்நாடு தேர்வாரியத்தின் மூலமாக அவர் களுக்குள்ளாக ஒரு தேர்வை நடத்தி அனைவரையும் பணி நிரந்தரம்செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தினார்.
1978ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் மேனிலைப்பள்ளியில் தொடங்கப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவு ஏற்படுத்தி 1800 தொழிற்கல்வி ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்தது அப்போதைய எம்.ஜி.ஆர் அரசுஆனால் பணி நிரந்தரம் செய்யவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கைகள் பல வைத்தும் போராட்டங்கள் பல நடத்தியும் வழக்குகள் பல கண்டும் அப்போதைய அதிமுக அரசு பணி நிரந்தரம் செய்யவில்லை பின்பு 1989ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனே பரிசீலனை செய்து அனைவரையும் காலமுறை ஊதியத்தில் கொண்டு வந்து பணி நிரந்தரம் செய்தார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்,
மேலும் அதிமுக ஆட்சியில் மேல்நிலைப்பள்ளிகளி எல்கார்ட் மூலமாக 2000 கணினி ஆசியர்களை மாதம் ரூ 6000/- கு தற்காலிகமாக நியமித்து பணியாற்றி வந்தனர் அவர்களையும் விட்டவிடவில்லை அவர்களுக்கும் ஆசிரியர் தேர்வாரியத்தின் மூலம் அவர்களுக்கென ஒரு தேர்வு நடத்தி காலமுறை ஊதியத்தில் கொண்டுவந்து கணினி ஆசிரியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர்
எப்போதெல்லாம் ஒன்றிய அரசு ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துகிறதோ அப்போதெல்லாம் கோரிக்கை வைக்காமலேயே ஊதிய குழு பரிந்துரையை ஏற்று ஊதியத்தை உயர்த்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் , அதேபோன்று ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படியை உயர்த்துகிறதோ அப்போதெல்லாம் கோரிக்கைக்கு இடமளிக்காமன் உடனே உயர்த்தியவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர்
அரசு ஊழியர்கள். ஆசிரியர்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் செவிசாய்த்து கேட்டறிந்து நிறைவேற்றி அரசு ஊழியர்களின் காவலராக திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் முத்தமிழ் கலைஞர்.
கலைஞரின் மறு உருவம் தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சரும் அப்போதைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டலின் அவர்கள் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் எங்கள் நியாயமான போராட்டங்கள் அனைத்திலும்,அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அழைக்காமலேயே எங்கள் நியாயத்தை அறிந்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர போராடிய போராட்டம் உட்பட அனைத்து போராட்டங்களுக்கும் நேரடியாக வந்து ஆதரவு அளித்து தங்கள் உடலை வருத்திக் கொண்டு போராட வேண்டாம்.நான் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றுவேன் அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள் துறைரீதியான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் , வேலை நிறுத்த போராட்டக்காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியத்துடன் கூடிய விடுப்பாக அறிவிக்கப்படும் , போராட்டக்காலத்தில் பணியிட மாற்றம் செய்தவர்களை அதே பணியிடத்தில் பணியாற்ற மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும் என சூளுரைத்து கலைஞரின் மறு உருவம் என நிருபித்தவர் தான் முதலமைச்சர்
இதற்கு எதிர் மாறாக அப்போதைய முதலமைச்சரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டங்களை கொச்சைப்படுத்தி ஐந்தாம் கிளாஸ் கற்றும் தரும் தலைமையாசிரியருக்கு எவ்வளவு மாத சம்பளம் வாங்குகிறான் தெரியுமா ரூ 82 ஆயிரம் என ஒருமையில் பேசியதையும் அரசு வருமானத்தில் 90% விழுக்காடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியம் வழங்குவதற்கே போய்விடுகிறது என மக்களை திசை திருப்பி உரையாற்றி அவர்களிடத்தில் கேள்வி எழுப்பி அரசு ஊழியர்கள் எதிராக மக்களை தூண்டிதை எந்த அரசு ஊழியரும் ஆசிரியரும் மறக்க மாட்டார்கள் 19ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் 5000 கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்து துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்தும் பணியிட மாற்றம் செய்து பந்தாடிய கொடுமையை எந்த அரசு ஊழியர் ஆசிரியரால் மறுக்க முடியும் மறக்க முடியும் , அதேபோன்று 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் ஒரு வார்த்தைக்கூட தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்யவில்லைஎன்பதையும் எப்படி மறக்க முடியும்
ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவது அதிமுக ஆட்சி நடைபெற்ற கொரோனா காலத்தில் நிறுத்தப்பட அகவிலைப்படி உய்ரவு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் மீண்டும் வழங்குதல் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் அனைத்தும் இடம்பெற்றது
2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு பெரும் நிதிநிலை நெருக்கடியை சந்தித்தது அதாவது கொரோனா இரண்டாம் அலையில் உலகமே பெருதும் பாதிப்படைந்த்து இந்தநிலையில் தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார், இந்த போதிலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதிநிலை சரியாக சரியாக ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என அறிவித்து 2019ம் ஆண்டு புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தின் போது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பெற்றார் துறைரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்தார் , போராடியவர்களை பணியிடம் மாற்றம் செய்தவர்களை அதே பணியிடத்தில் கொண்டுவர பணியிட மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை, பதவி உயர்விற்கு பிறப்பித்த உத்தரவு ரத்து, போராட்டக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்கி உத்தரவிட்டார் , ஒளிவு மறைவற்ற பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தியது, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை ஒன்றிய அரசு வழங்கிய நிலையில் இரண்டுமுறை ஆறு மாதம் கழி்த்து வழங்கினார் மேலும் நிதிநிலை சரியானதும் ஒன்றிய அரசு எந்த தேதியில் இருந்து வழங்குகிறது அந்த தேதியில் வழங்குவேன் என சட்டப்பேரவையில் அறிவித்தவாறு தற்போது ஒன்றிய அரசு அகவிலைப்படியை உயர்த்துகின்ற அதே தேதியில் வழங்கி செய்வதை சொல்லக் கூடிய முதலமைச்சராகவும் , சொல்வதை செய்ய முதலமைச்சராகவும் திகழ்கிறார்
கடந்த 10 பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் தலைமை செயலகத்தில் எந்த திசையில் முதலமைச்சர் அறை இருந்தது என்றே தெரியாத அவலநிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இருந்தார்கள் அதற்கு எதிர்மாறாக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் பலமுறை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அறைக்கே அழைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து உங்கள் கோரிக்கைகளை நான் செய்யாமல் யார் செய்வார்கள் என சொல்பவர்தான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவலர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறு உருவம் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதற்கு இதுவே முன் உதாரணம்
அரசு ஊழியர்களின் நீண்ட ஆண்டு எதிர்கால கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவார் , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் வழங்குவார் , பகுதிநேர சிறப்பாசியர்களின் பணி நிரந்தரம் , சமவேலைக்கு சம ஊதியம் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கலைதல் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றம் செய்தல் , மருத்துவத்துறை பன்நோக்கு பணி நிரந்தரம் , கிராம உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவருதல் ,விளையாட்டுத்துறையில் பணியாற்றும் அவுட் ஷோர்சிங் ஊழியர்களை அரசு ஊழியர்களாக கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவார்
மேலும் காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியதிட்டத்தை மீண்டும் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தி உள்ளார்கள் என்பதையும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு இந்த நேரத்தில் நினைவுப்படுத்துகிறேன் மேலும் இது தேசிய அளவில் மீண்டும் நடைமுறை படுத்தும் நேரமும் வாய்ப்பும் தற்போது நம் கையில்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
No comments:
Post a Comment