Advertisements about education and educational institutions! - ATTENTION PARENTS AND STUDENTS!! கல்வி மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்த விளம்பரங்கள்! - பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!!
நாள் : 10-04-2024
மதிப்பிற்குரிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தற்போது இணையத்திலும் சோசியல் மீடியா whatsapp போன்றவற்றில் கல்வி மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்த விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த விழிப்புணர்வு பதிவு வெளியிடப்படுகிறது
தற்போது பதினொன்றாம் வகுப்பு சேருவதற்கு நாமக்கல்லில் உள்ள ஒரு சில கோழிப்பண்ணை பள்ளிகள் வருடத்திற்கு மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை வசூலிப்பதாக தெரிகிறது.
பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஆறு லட்சம் முதல் 8 லட்சம் வரை கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது
மேலும் நீங்கள் நீட் போன்ற தேர்வுகளில் போதுமான மதிப்பெண் பெறவில்லை என்றால் மாணவர்களுக்கு அந்த கோழிப் பண்ணை பள்ளிகளே குறைந்த கட்டணத்தில் MBBS படிப்பில் சேர்த்து விடுவதாக உறுதி கூறி பணம் பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.
ரிப்பீட்டர் என்ற ஒரு பயிற்சியின் மூலம் மாணவர்களின் வருடங்கள், வாழ்க்கை, பணம், மனநிலை பாதிக்கப்படுகிறது.
ரிப்பீட்டர் என்ற பயிற்சி முறையின் மூலமாக ஒரு ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை மாணவர்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது இதில் வெற்றிபெறும் மாணவர்களின் சதவிகிதம் 100 பேரில் 10 பேர் மட்டுமே.
பெற்றோர்கள் தேவை இல்லாமல் பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்றும் தங்களிடம் உள்ள நகையை, நிலத்தை விற்று வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று பெற்றோர்களும், மாணவர்களும் கடனாளியாக ஆக வேண்டாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு ஒரு சில கல்வி நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம், ஆசைகளை தூண்டி மாணவர்களை தங்களது கல்வி நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதுபோன்று பகல் கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்களில் தங்களது குழந்தைகளை சேர்த்து பணத்தை இழக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தும் கல்வி கண்காட்சிகள், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள், கல்வி ஆலோசனைகள் என்ற பெயரில் கலந்து கொள்ளும் பொழுது கவனமாக இருக்கவும். அங்கே பெற்றோர்களையும் மாணவர்களையும் மூளை சலவை செய்து அட்வான்ஸ் என்ற பெயரில் சேர்க்கை கட்டணம் வசூலிக்கப்படுகிறது
பெற்றோர்களும் மாணவர்களும் கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கவும்.
அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு NEET, IIT -JEE போன்ற 25 க்கும் மேற்பட்ட தேர்வுகள் எழுதுவது குறித்த விபரங்களை ஆக்டிவிட்டி எஜுகேட்டர் தேசிய கல்வி வள நிறுவனம் வழங்கி வருகிறது. பெற்றோர்களும் மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தப் பதிவு கல்வி விழிப்புணர்வுக்காக மட்டுமே வெளியிடப்படுகிறது
நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் எண் 9481422237
No comments:
Post a Comment