தேர்தல் பணிகள் ஒதுக்கீடு அதிருப்தி, பெண் ஆசிரியர்கள் முறையீடு! - Newsnews

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 11 April 2024

தேர்தல் பணிகள் ஒதுக்கீடு அதிருப்தி, பெண் ஆசிரியர்கள் முறையீடு!

*நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் ஒதுக்கீடு அதிருப்தி,* *பெண் ஆசிரியர்கள் முறையீடு.*

அரசு விடுமுறை நாளான இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பெண் ஆசிரியர்கள் வந்தனர்.

அங்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்திக்க காத்திருந்தனர்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் இன்று தேர்தல் பணி சார்ந்து வெளியில் சென்று விட்டதாக தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மதிப்பிற்குரிய மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் அவர்களிடம் தொலைதூரத்தில் பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி போடப்பட்டு இருப்பதை மாற்றி அவர்களுக்கு சொந்த தொகுதியிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும், ஒரு மாவட்டத்திற்குள் தேர்தல் பணியாளர்கள் தங்களுக்குள் மனமொத்த மாறுதலில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் சார்ந்து பெண் ஆசிரியர்கள் தங்களது தரப்பு கருத்துக்களையும் அதிருப்தியையும் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக இராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், நாமக்கல்லில் இருந்து குமாரபாளையத்திற்கு பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் தாங்கள் இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் பயணம் செய்து அங்கு சென்று வரக்கூடிய நிலை இருப்பதையும் தெரிவித்தனர்.

அதேபோல அங்கு நூற்றுக்கும் குறைவான ஆண் பணியாளர்களே நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். மீதி உள்ள 95 சதவீத பணியாளர்கள் பெண் பணியாளர்களே என்றும் தெரிவித்தனர்.

எனவே ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு ஆண் தேர்தல் பணியாளரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் நாமக்கல்லில் இருந்து ராசிபுரத்தில் இருந்து குமாரபாளையத்திற்கு தேர்தல் பயிற்சிக்கு சென்று வருவதற்கும் தேர்தல் நாளன்று சென்று வருவதற்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் தெரிவித்தனர் .

மேலும் தேர்தல் ஆணையம் பெண்ணாசிரியர்களுக்கு அந்தந்த தொகுதியிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தங்களுக்கு குமாரபாளையத்தில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தாங்கள் மணிக்கணக்கில் பயணம் செய்து தேர்தல் பணி சார்ந்த பயிற்சிக்கு சென்று வரக்கூடிய சூழ்நிலையைத் தெரிவித்தனர்

எனவே எங்களுக்கு எங்களது சொந்த தொகுதியில் தேர்தல் பணி வழங்க மதிப்பிற்குரிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதேபோல நாங்கள் தேர்தல் பணி வேண்டாம் என்று சொல்லவில்லை எங்களுக்கு குறைவான தொலைவில் பயணம் செய்து தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அளவில் வாக்குச்சாவடிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல நாமக்கல் வருவாய் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் தங்களுக்குள் மனமொத்த மாறுதல் வேண்டி நாங்கள் கொடுத்திருக்கக்கூடிய கோரிக்கை மனுக்களையும் பரிசீரித்து அவற்றையும் மாற்றி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டாலும் தேர்தல் பணி முடிந்து வீட்டுக்கு வரவும் பல்வேறு சிரமங்களை சந்திக்கக்கூடிய நிலை வரும் என்பதையும் தெரிவித்தனர்.

இது சார்ந்து பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலர் திரு சுமன் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் 5400 பெண் பணியாளர்களும் 2400 ஆண் பணியாளர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

பெண்கள் அதிகம் இருப்பதினால் இதுபோன்று ஒரே தொகுதியில் அதிகம் பெண்ணாசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடிய நிலை வந்திருக்கிறது மேலும் இது இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள ரேண்டமைசேஷன் முறையில்தான் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது எனவே இன்று எங்களை சந்தித்த அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பை சார்ந்த சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகள் மற்றும் பெண் ஆசிரியர்களின் கோரிக்கை சார்ந்து மதிப்பிற்குரிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் கலந்து பேசி தகவல் தெரிவித்த பின்னர் மதிப்பிற்குரிய தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு அவர்கள் கொடுக்கும் அனுமதியைப் பொறுத்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது மாற்றங்கள் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இன்று *அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சங்க பொறுப்பாளர்கள்* *ஆ.இராமு க.செ.பாலகிருஷ்ணன்*

*கு.அத்தியப்பன்*

*கபிலர்மலைசெந்தில்*

*முத்து வரதப்பன் ம.சரவணன் ,*

*சரவணகுமார் தர்மராஜ்,*

*பிரபு*

*முருகேசன் தென்னரசு,*

*சரவணன்,*

*அன்புராஜ்*

*மகளிர் அணி தீப்தி,*

*வளர்மதி,*

*வெண்ணிலா* *ஆகியோர் உடன் இருந்தனர்.*

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here